ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
போகன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடித்துள்ள படம் டிக் டிக் டிக். சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார். இந்தியாவில் தயாராகியுள்ள முதல் விண் வெளிப்படம் இது. இந்த படத்தில் 20 நிமிடங்கள் விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு சண்டை காட்சியும் அடங்கும். இந்த காட்சிகளுக்காக 5 மாதங்கள் ஒர்க் பண்ணியிருக்கிறார்கள்.
இந்தபடம் பற்றி ஜெயம்ரவி கூறுகையில், டிக் டிக் டிக் கதையைக்கேட்டு முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், இந்தமாதிரியான வித்தியாசமான கதைகளில் தமிழ் ரசிகர்களுக்கும் படம் கொடுக்க வேண்டும் என்று நடிக்க முடிவெடுத்தேன். அந்த வகையில் ஹாலிவுட் தரத்துக்கு இணையான தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் நான் விண்வெளி பாதுகாப்பு பிரிவில் ஒரு முக்கிய அதிகாரியாக நடிக்கிறேன். விண்வெளிக்குள் நுழைந்து ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் முழுக்கதையும் இதுதான். நடிக்கும்போது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ அதேபோல் ரசிகர்களுக்கும் இந்த படம் திரில்லிங்காக இருக்கும் என்கிறார் ஜெயம்ரவி.