விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம், தொடர்ந்து கமல் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது. என்றாலும், சத்யராஜை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு, நாசர் நடித்த மகளிர் மட்டும், மாதவன் நடித்த நள தமயந்தி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது. அதாவது பிற ஹீரோக்கள் நடித்த படங்களையும் அவ்வப்போது தன்னுடைய பேனரில் தயாரித்திருக்கிறார் கமல்.
இந்த வரிசையில் இன்னொரு படமும் இணைந்துள்ளது. விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை கமல் தயாரிக்கிறார். அக்ஷ்ரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். 'தூங்காவனம்' படத்தை இயக்கியவர் இவர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை, படத்தின் பூஜைக்கு முன்பே ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. இந்தப்படத்தில் நடிக்க விக்ரமுக்கு 15 கோடி சம்பளம் கொடுக்கப்பபட்டிருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க 17 கோடி சம்பளம் வாங்கியுள்ள விக்ரம், கமலுக்காக 2 கோடி தள்ளுபடி கொடுத்திருக்கிறார்.