பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் பக்கா. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'பக்கா' படத்துக்கு சத்யா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு கதாநாயகன் விக்ரம் பிரபு வரவில்லை.
ஈசிஆர் தாண்டி படப்பிடிப்பில் இருப்பதாக கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தார் விக்ரம் பிரபு. அதை மேடையில் பேசும்போது வாசித்துக் காட்டினார் நிக்கி கல்ராணி. உண்மையில் பக்கா படத்தின் இயக்குநர் சூர்யாவுக்கும், விக்ரம்பிரபுவுக்கும் படப்பிடிப்பில் கருத்து மோதல் ஏற்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, நிக்கி கல்ராணி பேசும்போது பக்கா படத்தின் சஸ்பென்ஸை உடைத்துவிட்டார், 'நான் இந்த படத்தில் ரஜினி சாரின் ரசிகையாக நடிக்கிறேன்! நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்த படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன். இந்த படத்தில் விக்ரம் பிரபு இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவரோட இரண்டாவது கெட்-அப் சர்ப்ரைஸாக இருக்கும்'' என்றார்!