தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தை அடுத்து, அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் - 'இரும்புத்திரை'. இந்தப்படத்தில் முதல்முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சமந்தா. இரும்புத்திரை படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார்.
இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடுவதற்கு முதலில் திட்டமிட்டிருந்தார் விஷால். அதே தேதியில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஜீவா நடித்திருக்கும் 'கீ' படம் வெளியாகவிருப்பதால், அப்படத்திற்காக தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருப்பதாக கீ ஆடியோ விழாவில் அறிவித்தார் விஷால்.
'இரும்புத்திரை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன? 'இரும்புத்திரை' படத்தை மார்ச் 29ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் விஷால். ஆர்யா நடித்துள்ள 'கஜினிகாந்த்' படத்தை மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்த தகவலை தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால், ஆர்யா, விஷால் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.