டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
7 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 100% லவ் என்ற படம் தற்போது தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி.பிரகாசும், தமன்னா நடித்த கேரக்டரில் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் மூலம் புகழ் பெற்ற ஷாலினி பாண்டேவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகிபாபு, சதீஷ், மனோபால உள்பட பலர் நடிக்கிறார்கள்.
எம்.எம்.சந்திரமவுலி இயக்குகிறார், கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படத்திற்கு பிறகு இந்தப் படம் வெளிவரும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை படத்தை தயாரிக்கும் கிரியேட்டிவ் சினிமா, என்.ஜே.எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்தார் செய்து வருகிறார்கள்.