ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு ஆர்யா நடிக்கும் படங்களில் படம் முழுக்க வருவார் சந்தானம். அதோடு பாடல் காட்சிகளிலும் நடனமாடுவார். ஒருகட்டத்தில் தானும் ஹீரோவாகி விட்ட சந்தானம், இப்போது எந்த படத்திலும் காமெடியனாக நடிப்பதில்லை என்கிற புதிய கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
ஆனபோதும், ஆர்யாவுக்கும், அவருக்குமிடையிலான நல்ல நட்பு இப்போதுவரை தொடர்கிறது. இந்த நிலையில், தற்போது ஆர்யா நடித்து வரும் கஜினிகாந்த் படத்தின் டிரெய்லரில் டப்பிங் கொடுத்துள்ளார் சந்தானம். இதற்காக சந்தானத்தை ஆர்யா அழைத்தபோது படப்பிடிப்பில் இருந்த சந்தானம், மின்னல் வேகத்தில் வந்து அவருக்காக டப்பிங் பேசிக்கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.