வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
தெலுங்கில் வெளிவந்து கடந்த வருடம் பெரிய வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. அப்படத்தின் தமிழ் ரீமேக் 'வர்மா' என்ற பெயரில் உருவாக உள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ், இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இதுவரை ரீமேக் படங்களையே இயக்காத பாலா, விக்ரம் கேட்டுக் கொண்டதால் 'வர்மா' படத்தை இயக்கித் தர சம்மதித்துள்ளார்.
'வர்மா' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டது. படத்திற்காகப் பொருத்தமான நாயகியைத் தேடி வருவதாகவும் கூறியிருந்தார்கள். படத்தின் நாயகி யார் என்பதை முடிவு செய்துவிட்டார்களாம், ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். தற்போது படத்தின் கதாநாயகன் துருவ் படத்தில் அணிய உள்ள ஆடைகளைத் தேர்வு செய்ய விக்ரம் அவருடைய மகனுடன் வெளிநாடு பறந்துள்ளாராம்.
பாலா தற்போது இயக்கி வரும் 'நாச்சியார்' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் 'வர்மா' படப்பிடிப்பை பாலா ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள்.