'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஜாக்கி சான் தயாரித்து, நடித்துள்ள புதிய படம் ப்ளீடிங் ஸ்டீல். ஜாக்கியுடன் ஷோலூ, ஓயாங் நானா, டெஸ் ஹயூபிரிச், கேலன் மெவ்லி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பெய் பெங் இசை அமைத்துள்ளார், டோனி சேங் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ சாங் இயக்கி உள்ளார்.
மெடிக்கல் க்ரைம் திரில்லர் படம். வினோத வில்லன், எல்லா சக்தியும் படைத்த வில்லி. அவர்களை எதிர்த்து போராடும் சீக்ரெட் ஏஜெண்ட் ஜாக்கி சான். இவர்கள் மூவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஜாக்கிசானின் மகள் என பரபரப்புடன் வேகமெடுக்கும் திரைக்கதையை கொண்டது. சேசிங் காட்சிகள் படத்தின் ஸ்பெஷல்.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி சீனாவில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வருகிற பிப்ரவரி 2ம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது. தமிழில் கே.ஆர்.எஸ்.சினிமா சார்பில் கே.ரவி, எஸ்.பிலிம்ஸ் கார்பரேஷன் சார்பில் சேலம் பி.பாஸ்கர் ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.