Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பேய் என்றால் எனக்கு பயம் : ஜரீன் கான்

12 ஜன, 2018 - 15:22 IST
எழுத்தின் அளவு:
I-am-very-weak-and-scared-about-ghosts-says-Zareen-Khan

அக்சர் 2 படத்தின் தோல்விக்கு பிறகு ஜரீன் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் பேய் படம் "1921". விக்ரம் பட் இயக்கத்தில், உருவாகி உள்ள இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் ஜரீன் கான் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

1921 டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது, படத்தை எந்தளவுக்கு எதிர்பார்த்திருக்கிறீர்கள்?
1921 படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் விக்ரம் பட்டின் இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருடைய படங்களால் நான் ஈர்க்கப்பட்டேன். விக்ரம் பட் போன்று, ஒரு ஹாரர் படத்தை யாராலும் இயக்க முடியாது. அதில் அவர் பிஹெச்டி வாங்கியவர். படத்தில் என் நடிப்பு குறித்து நிறைய பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க?
இதுவரை என் வாழ்நாளில் நடித்திராத ஒரு கேரக்டர் இந்த படம் மூலம் கிடைத்துள்ளது. ரோஸ் என்ற கேரக்டரில், ஆவிகளுடன் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறேன். ஆவிகள் சொல்வதை மனிதர்களிடம் சொல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர். இந்த ரோலில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. மேலும் நான் ஹாரர் படங்களை பார்த்தது கிடையாது, ஏனென்றால் இரவில் எனக்கு தூக்கம் வராது.

தொடர்ந்து டெலிவிஷன் நடிகர்களுடன் நடிப்பது பற்றி?
இந்த நடிகர் உடன் தான் நடிப்பேன் என்று முன்கூட்டியே நான் தீர்மானிப்பது கிடையாது. எந்த நடிகருடனும் நடிப்பேன். கரண் குந்த்ராவும் பிரபலமான நடிகர் தான். என்னைப் பொறுத்தமட்டில் கதையையும், அதில் என் கேரக்டரை மட்டுமே பார்ப்பேன். மற்றபடி ஹீரோ யாரென்று பார்ப்பது கிடையாது. என்னுடன் நடிப்பவரை சக நடிகராகத்தான் பார்க்கிறேன்.

பேய் குறித்து உங்கள் அபிமானம் என்ன, பேய் இருக்கிறதா?
இந்த விஷயத்தில் நான் ரொம்ப வீக். பேய் என்றாலே நான் மிகவும் பயப்படுவேன். ஹாரர் படங்களை கூட பார்க்கமாட்டேன். 1921 படப்பிடிப்பில் கூட, யாரும் என்னை பயமுறுத்த கூடாது, இல்லையென்றால் வேறு நடிகை தான் நடிப்பார் என்று சொல்லி தான் நடித்தேன். அந்தளவுக்கு நான் பயந்த சுபாவம் உடையவள். பேய் இருக்கு என்று நம்புகிறேன். ஆனால் என் வாழ்க்கையில் அது வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

ஒரு படத்திற்கு ஸ்டார் வேல்யூ எந்தளவுக்கு முக்கியம்?
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்டார் வேல்யூ எல்லாம் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், கதை சரியில்லை என்றால் வர மாட்டார்கள். கடந்தாண்டு நிறைய சூப்பர் ஸ்டார்களின் படங்கள் தோல்வியை தழுவின, அதற்கு முக்கிய காரணம் கதை சரியில்லாதது தான்.

யாருடைய வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை?
ராணி லட்சுமி பாய் கதையில் நடிக்கும் ஆசை முன்பு இருந்தது, ஆனால் இப்போது அந்த ரோலில் கங்கனா நடிக்கிறார். ஆகையால் இப்போது நடிகை பூஜா பட்டின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவரின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.

இவ்வாறு ஜரீன் கான் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பது என் வேலையல்ல : அனுராக் காஷ்யாப்நடிப்பது என் வேலையல்ல : அனுராக் ... 2020, கிறிஸ்துமஸில் கிரிஷ் 4 ரிலீஸ் 2020, கிறிஸ்துமஸில் கிரிஷ் 4 ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in