டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்த பொங்கலுக்கு தமிழில் நயன்தாரா நடித்த படங்கள் வெளியாகவில்லை என்றபோதும் தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் ஜனவரி 12-ந்தேதியான இன்று வெளியாகிறது. அதேபோல், தமன்னாவுககு ஸ்கெட்ச் படமும், ஹன்சிகாவுக்கு குலேபகாவலி படமும், கீர்த்தி சுரேஷ்க்கு தானா சேர்ந்த கூட்டம் படமும் வெளியாகின்றன. ஆனால் திரிஷாவுக்கு எந்த மொழியிலும் படங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ள மோகினி படத்தின் பாடல்கள் ஜனவரி 12-ந்தேதியான இன்று வெளியாகிறது. இந்த படத்திற்கு மெர்லின்-சாலமன் என்ற இரட்டையர் இசையமைத்துள்ளனர். ஆக, மோகினி பாட பாடல்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுக்கிறார் திரிஷா.