ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நிவின்பாலி தற்போது நடித்து வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார் என சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானதுமே, அது இயக்குனரின் நட்புக்காக சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய கெஸ்ட் ரோலா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக மோகன்லாலின் கதாபாத்திரம் பற்றி சில கூடுதல் தகவல்களை அளித்துள்ளார். அதாவது, கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே ராபின்ஹூட் போலவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார்.
அதேசமயம், இப்படி ராபின்ஹூட் பாணியில் கேரளாவில் உருவாகிய முதல் கொள்ளையன் என்றால் அது இதிக்கரா பக்கி என்பவன் தான். அதன்பின் வந்தவன் தான் 'காயங்குளம் கொச்சுன்னி' போறவர்கள். அந்த இதிக்கரா பக்கி கேரக்டரில் தான் மோகன்லால் நடிக்க இருக்கிறார். அதுவும் சில நிமிடங்கள் மட்டும் அல்ல, படத்தில் ஒரு முக்கியமான போர்ஷன் முழுதும் மோகன்லால் கேரக்டரை மையப்படுத்தியே நகரும் என கூறியுள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.