இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகிய இருவரும் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே தங்களது உடலை வருத்தி நடிக்கக் கூடியவர். அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தசாவதாரம் உள்பட பல படங்களில் கதாபாத்திரங்களுக்காக தனது உடல்கட்டை வருத்தி நடித்துள்ளார் கமல்.
அதேப்போல், சேது, பிதாமகன், காசி, ஐ உள்ளிட்ட படங்களில் தனது உடலை வருத்தி நடித்தார் விக்ரம். அப்படிப்பட்ட கமல், விக்ரம் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவில்லை. மாறாக, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். அந்த படத்தை கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.