'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நட்சத்திர தம்பதியர்களான சைப் அலிகான் - கரீனா கபூருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மகன் பிறந்தார். மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் சூட்டியுள்ளனர். மகனுக்கு ஒரு வயதாகி உள்ள நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தைமூர் அலிகானின் போட்டோக்கள் வைரலாக பரவி வருவதுடன், தைமூர் பிரபலமாகி உள்ளான்.
இதுகுறித்து சைப் அலிகான் கூறுகையில், என் மகன் ரபீந்திரநாத் தாகூர், ராஜ் கபூர், மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோர்களின் சாயலில் இருப்பதால் மிகவும் அழகாகவும், பிரபலமாகவும் உள்ளான் என்று கூறியுள்ளார்.
தற்போது சைப் அலிகான், காலாகண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது.