டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2018 பொங்கலுக்கு வெளிவருவதாக கடந்த சில வாரங்களாகவே அறிவிக்கப்பட்டு வந்த படங்கள் “தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மதுர வீரன், மன்னர் வகையறா”. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து படங்களுடன் தற்போது ஆறாவது படமாக விக்ரம், தமன்னா நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படமும் இந்தப் போட்டியில் இணைந்துவிட்டது.
முதலில் ஜனவரி வெளியீடு என அறிவிக்கப்பட்டு வந்த இந்தப் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட முன்னரே திட்டமிட்டிருந்தார்களாம். சென்னையில் உள்ள சென்சார் அதிகாரி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அதிகாரி பதவியேற்க வருவதற்கான இடைவெளியில் பொங்கல் படங்களை சென்சார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, சில படங்கள் ஜனவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தன.
இதனிடையே 'ஸ்கெட்ச்' படத்தின் சென்சார் நேற்று முடிவடைந்து படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழும் வழங்கிவிட்டார்கள். அதனால், படத்தை பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் நான்கு நாட்களைக் கணக்கில் கொண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களாகவே பொங்கலுக்கு ஓரிரு படங்களே வெளிவந்தன. ஆனால், இந்த வருடம் அதிகமான படங்கள் வெளிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் 1000 தியேட்டர்களையும் பொங்கலுக்கு வெளியாகும் 6 படங்கள் பிரித்துக் கொள்வதில் சிக்கல் வரலாம். இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்தப் போட்டியிலிருந்து சில படங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.