'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷுடன் சேர்ந்து 'முதுகாவ்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அர்த்தனா. ஆனால் மலையாளத்தை விட தமிழில் வெளியான சமுத்திரக்கனியின் 'தொண்டன்' படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள 'செம' படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அர்த்தனா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே பாண்டிராஜின் தயாரிப்பில் உருவான 'செம' படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது அவரது டைரக்சனிலும் இவருக்கு கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.