‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியான மம்முட்டியின் 'மாஸ்டர்பீஸ் படமாகட்டும், அதற்கு முன் வெளியான அவரது மற்ற இரண்டு படங்களாகட்டும், இவை எதுவுமே சரியாக போகாத நிலையில், தானே சொந்தமாக தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் மூலம் இந்த வருடத்தின் தனது முதல் வெற்றியை எதிர்பார்க்கிறார் மம்முட்டி.
மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட இந்தப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜன-26ஆம் தேதியில் தமிழில் பல பெரிய படங்கள் ரிலீஸ் ரேஸில் இருந்தாலும், 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படமும் ரேஸில் கலந்துகொள்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் மம்முட்டி.. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டரே கிடையாது. இந்தப்படத்தின் தமிழ் வெர்சனில் மம்முட்டியுடன் பாண்டியராஜன், அவரது மகன் பிருத்வி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, பிளாக் பாண்டி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்கள்.
கமலின் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத் ஷைனுதீன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.