பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும், அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான லிசியும் மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் பிரிய முடிவெடுத்தது இருவருக்குமான ஈகோ மோதலால் தானே தவிர வேறு எந்த புறக்காரணங்களும் இரண்டு தரப்பிலும் இல்லை.. அதனாலேயே லிசியின் மீது இன்னும் பிரியதர்ஷனுக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கவே செய்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன் தனது பேஸ்புக்கில் “உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. உனக்கும் எனக்கும் மட்டுமே 'நீ' யார் என்பது தெரியும்.. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..” என பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரியதர்ஷன்.
அதை தொடர்ந்து சில மணி நேரத்தில் இவர்களின் மகள் கல்யாணி, தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதன்மூலம் பிரியதர்ஷன் தனது முன்னாள் மனைவிக்குத்தான் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் என்பது உறுதியானது.