ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை, மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இணையதளங்களில் வைரலாக பரவியவர் ஜூலி. அதன்பின்னர் விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகி இன்னும் பிரபலமானார். அதேசமயம் நெட்டிசன்களால் மிகவும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை தொகுப்பாளினி ஆனார். விழாக்களில் சிறப்பு அழைப்பாளர் ஆனார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடனம் ஆடுகிற அளவிற்கு வளர்ந்தவர், இப்போது அடுத்து கட்டமாக சினிமா நடிகை ஆகியிருக்கிறார். விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
கே7 புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜூலி தான் ஹீரோயின். பப்ளிக் ஸ்டார் என்று தனக்குதானே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் துரை சுதாகர் ஹீரோ. "இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது நடிக்க ஒப்புக் கொண்டேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பேன்" என்கிறார் ஜூலி.