ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் படம் சமீபத்தில் வெளிவந்தது. காமெடியாக நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்தப்படத்தில் சீரியசாக நடித்திருந்தார். படம் பற்றியும், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தும், சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
வேலைக்காரன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. நல்ல விஷயத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது தான், மொத்த படக்குழுவினருடைய ஆசை. அதை கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் லைட் அடித்து காண்பித்த போது, நல்ல விஷயத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டீர்கள் என்று சந்தோஷப்பட்டேன், அதற்கும் நன்றி.
திரையரங்குகளில் இப்படி நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு படமுமே முக்கியமான படமாகத் தான் நினைக்கிறேன். அதிலும் வேலைக்காரன் படத்தில் முழுமையான சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இன்னும் ஸ்பெஷல். ஒரு நடிகனாகவும், மனிதனாகவும் நிறைய மாற்றங்கள் அப்படம் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் படத்திற்கு அனைவரும் பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள். மிகப்பெரிய நன்றி.
என்னுடைய ரசிகர்கள், தமிழக மக்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள், நலம் விரும்பிகள், அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவருமே இந்த 2017-ம் ஆண்டை சந்தோஷமாக முடித்து வைத்திருக்கிறீர்கள். அதெல்லாம் தாண்டி இன்னும் நல்ல படங்கள் பண்ணலாம், உழைக்கலாம் என்ற பெரிய நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையோடு 2018-ம் ஆண்டை சந்திக்க தயாராகி வருகிறேன். அனைவருக்குமே வாழ்க்கையில் சவால்கள் இருக்கின்றன. அது அனைத்தையும் நம்பிக்கையுடனும், சந்தோஷத்துடனும் எதிர்கொள்வோம். இதுவரைக்கும் இருந்ததை விட 2018-ம் ஆண்டில் நாம் நினைத்தது எல்லாம் நடக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உலகின் தலை சிறந்த சொல் - செயல்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் வீடியோவில் பேசியிருக்கிறார்.