வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள். தியேட்டரில் படம் வெளியான அன்றே திருட்டுத்தனமாக இதுபோன்ற இணையதளங்களிலும் படத்தை வெளியிடுகின்றனர். ரஜினி படம் முதல் சின்ன நடிகர்களின் படங்கள் வரை எவரும் தப்பியது கிடையாது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
விஷால் தலைமையிலான நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பேற்ற பின்னர் இந்த இணையதளத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படை வெல்லும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சார்பில் சிபிசிஐடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் முறையாக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட 3 இணையதளத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.