Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தமிழ்ப் படம் 2.0' - கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா ?

09 டிச, 2017 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Tamilpadam2pointO-fun-begins-from-the-Poster

தமிழ் சினிமாவையே அமோகமாகக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட படமான 'தமிழ்ப் படம்' 2010ம் ஆண்டு வெளிவந்தது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியையும் பெற்றது.

7 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சிவா, இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் சித்தார்த் இன்று காலை வெளியிட்டார்.

அந்த போஸ்டரில் '25.05.2018 தியேட்டர்களில் படம் வெளியாகிறது, 26.05.2018 அன்று தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிறது,” என்ற வாசகங்களுடன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். படங்களைக் கிண்டல் செய்வது பரவாயில்லை. ஆனால், தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பைரசி பிரச்சனையான தமிழ் ராக்கர்ஸ் இணையதளப் பிரச்சனையையும் சேர்த்து கிண்டலடித்திருப்பது ஓவராகவே இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கமும், மற்ற தயாரிப்பாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனையை அழிக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர்களையும் சேர்த்தே இந்த போஸ்டர் கிண்டலடித்துள்ளது. அதிலும் 'அதிகாரப்பூர்வ பைரசி பார்ட்னர்' என்று அந்த இணையதளத்தின் லோகோவையும் போஸ்டரில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் '2.0' படத்தைக் கிண்டலடித்து, 4 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் படத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' என ஒரு தலைப்பு, திரையுலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பைரசி இணையதளத்திற்கு ஒரு இலவச விளம்பரம்?. தமிழ் சினிமாவை நன்றாகவே வளர்க்கிறார்கள் 'தமிழ்ப் படம் 2.0' குழுவினர்....!!!.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

madhavan rajan - trichy,இந்தியா
13 ஜூலை, 2018 - 11:16 Report Abuse
madhavan rajan தமிழ் ரசிகர்களை மொட்டை அடித்துத்தானே தமிழ் சினிமாவை வளர்க்கிறீர்கள். தமிழ் சினிமா வளரவில்லை என்றால் தமிழன் உண்மையாகவே வளர்ந்துவிடுவான். நல்லவேளை ராக்கர்ஸில் முதலில் வெளியிட்டு பிறகு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தவில்லையே. அதுவும் நடந்தாலும் நடக்கும்.
Rate this:
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
12 ஜூலை, 2018 - 15:35 Report Abuse
வேலங்குடியான் தமிழ் ராக்கர்ஸ் ரொம்ப fast..... முதல் ஷோ மட்டும் தன் தியேட்டர்ல ஓடும் ..... அடுத்த ஷோ தமிழ் ராக்கர்ஸ் தான்.....
Rate this:
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
12 ஜூலை, 2018 - 15:19 Report Abuse
Prof. A.Venkateswaran. கேலி என்பது ஒரு கலை. அதை சமூக சீர்திருத்தங்களுக்கு பலர் பயன் படுத்தியுள்ளார். எ. கா. M R ராதா, N S கிருஷ்ணன், சோ, வடிவேலு, கவுண்டமணி விவேக். சமூகத்தில் புரையோடிப்போன தீமைகளை அவர்கள் சாடினார்கள். இவர்கள் சினிமாவில் உள்ள கேலிக்குரியவற்றை கேலி செய்கிறார்கள். சிரித்துவிட்டுச் செல்லுங்கள். அவர்களின் கேலியில் உண்மை இருக்குமாயின் திருந்துங்கள். " தமிழ் ராக்கர்ஸ் " பிரச்சினையை இவ்வளவு துணிவாக சுட்டிக்காட்டியிருப்பதைக் கண்டு அரசு ஆவன செய்யவேண்டும். முகம்மது பின் துக்ளக்கில் சோ செய்யாத கிண்டலா இவர்கள் செய்துவிட்டார்கள்? முடிந்தால் பாராட்டுங்கள். இல்லையெனில் படத்தை பார்க்காமல் விட்டுவிடுங்கள்.
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
20 ஜன, 2018 - 21:06 Report Abuse
M Selvaraaj Prabu தமிழ் சினிமாவை எதற்கு வளர்க்க வேண்டும்? ஒரு படத்தில் நடிப்பவர்க்கு கோடிகளில் சம்பளம். பட்ஜெட்டோ 100 கோடி, 200 கோடி மற்றும் 400 கோடி. போப்பா, போய் உன் வேலையை (ஏதாவது இருந்தால்) பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in