‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
7 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் திஷா பாண்டே. அதில் அவர் சிவா ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மயங்கினேன் தயங்கினேன் நடித்தவர், வாய்ப்பின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். கடந்த 2 வருடங்களாக எந்த படமும் இல்லாமல் இருந்தார்.
தற்போது தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் அவர் மீண்டும் சிவா ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தவர் இவர்.
இவர்கள் தவிர சதீஷ், சந்தான பாரதி, மனோபலா, நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே சுந்தர், அஜய் ரத்னம், உள்பட பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.