Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் கட்சி பெயரை அறிவிப்பேன் : கமல் பேச்சு

26 நவ, 2017 - 11:31 IST
எழுத்தின் அளவு:
political-party-will-formally-launch-says-kamal

விரைவில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் அறிவிக்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். டில்லியில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கமல் இதனை தெரிவித்துள்ளார்.

பேட்டியில் கமல் கூறுகையில், அரசியலுக்கு வர காரணமே எங்கும் மலிந்து கிடக்கும் ஊழலை துடைத்து எறிய வேண்டும் என்பது தான். தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.


அரசியலில் என்னை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. மாற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மாற்றத்தை விரும்புபவர்கள் என் பக்கம் வந்து நிற்பார்கள். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலோ, சினிமா தயாரிப்பு போன்ற தொழிலோ அல்ல. அதனால் அரசியலில் தோல்வி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது.


விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜ., மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை என்றார்.


பத்மாவதி பட சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பலர் அந்த படத்தை பார்க்காமலேயே தடை விதிக்க வேண்டும் என கூறுகிறார்கள். இது சரியல்ல.


Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

K Seetharaman - Chennai,இந்தியா
27 நவ, 2017 - 10:05 Report Abuse
K Seetharaman நமது நாட்டில் அரசியல் செய்ய கமலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை. இவர் ஒரு தொழில்நுட்ப வாதி, எதையும் செய்து பார்க்க ஆசைப்படுபவர், எதையும் அனுபவத்தின் மூலம் அறிந்து உணர விரும்புபவர். அந்த விதத்தில்தான் கட்சி தொடங்கி பார்க்க ஆசைப்படுகிறார். அரசியல் கமலின் ஆசையே தவிர அது இலக்கு அல்ல. விரைவில் அவரின் ஆசையை நிறைவேற்றிவிட்டுட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். இவரின் ஆசைக்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை.
Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27 நவ, 2017 - 09:54 Report Abuse
Agni Shiva போயா நீயும் உனது கட்சியும் பெயரும். உலகமே அதை தான் ஆவலாக எதிர்பார்த்தது உறங்காமல் இருக்கிறது. நீ கட்சி ஆரம்பித்தால் என்ன அகில அண்ட மூர்க்க கூமுட்டை கூட்டம் (அஅமுகூகூ) என்று வை அப்போது தான் சரியாக இருக்கும். ஐக்கிய நாட்டு சபையையே கைப்பற்றலாம்.
Rate this:
tsgs -  ( Posted via: Dinamalar Android App )
27 நவ, 2017 - 08:08 Report Abuse
tsgs இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதால் தவறில்லை
Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
27 நவ, 2017 - 08:02 Report Abuse
சூரிய புத்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது இருந்த இடம் தெரியாமல் இருந்து விட்டு. அவர் இறந்த பிறகு ஆறு மாத காலத்திற்குள் சமுதாய நலனில் அக்கறையுள்ளவன் போல் நடிக்கும் அறிவில்லாத கூத்தாடி, அவசர அவசரமாய் கட்சி தொடங்கி கல்லாக்கட்ட நினைக்கும் உன் நினைப்பில் தமிழர்கள் மண்ணள்ளி போடுவார்கள். ஆபாசமாய் படம் எடுத்து இளைஞர்களின் மனதை கெடுத்துவிட்டு இப்போது சமுதாயநலன் பற்றி பேசுகிறான் இந்த திருட்டு கோமாளி.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27 நவ, 2017 - 07:59 Report Abuse
Srinivasan Kannaiya புலி எப்போ வரும்...?????
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in