Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி பரவுவது வதந்தியா ?

29 அக், 2017 - 21:47 IST
எழுத்தின் அளவு:
Is-it-true-news-about-Nayanthara-and-Vignesh-shivan

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுவிட்டதாக ஒரு தகவலும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என மற்றொரு தகவலும் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு, மலையாள ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்த் திரையுலகத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் நெருக்கமானவர்களிடம் கேட்டால் அவர்கள் ஏற்கெனவே 'லிவிங் டு கெதர்' ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். இருவரும் சில வருடங்களாகவே ஒரே பிளாட்டில்தான் வசித்து வருகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக இருவரது பிறந்த நாளின் போதும், மாலத் தீவுகள், அமெரிக்காவில் அவர்கள் சுற்றுப் பயணம் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இருவரும் அவர்களது நெருக்கத்தைப் பற்றி இதுவரை மறைத்ததில்லை.

இருந்தாலும் நயன்தாரா தற்போது திருமணம் செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அவர் தற்போது தமிழில் 'வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ' ஆகிய படங்களில் நடித்து வருகீறார். தெலுங்கில் 'சை ரா, பாலகிருஷ்ணாவின் அடுத்த படம்' ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவ்வளவு படங்களை கையில் இருக்கும் போது அவர் எப்படி திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள்.

ஒரு நடிகைக்கு திருமணம் நடந்த பின் அவருக்கான 'இமேஜ்' குறைந்துவிடும் என்பது நயன்தாராவுக்குத் தெரியாதா என்றும் கேள்வி கேட்கிறார்கள்.

பொதுவாக காதல் வதந்திகள்தான் அதிகம் வரும், இப்போது கல்யாண வதந்திகள் அதிகம் வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தொழில்நுட்பத்தை கத்தி போல் பயன்படுத்தணும் : ஜீவாதொழில்நுட்பத்தை கத்தி போல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30 அக், 2017 - 08:24 Report Abuse
Mahmood Jainulabdeen அதுதான் எல்லாம் முடிஞ்சுபோச்சுங்களே, அப்புறம் கல்யாணம் எதுக்குங்கண்ணா ?
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
30 அக், 2017 - 03:10 Report Abuse
thonipuramVijay போங்கடா போய் ஊருக்கு நல்லது செய்யும் செய்திகளை போடுங்க.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in