Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியலுக்கு வருகிறார் ரேவதி

15 செப், 2017 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Revathi-in-Television

மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் ரேவதி. துளியும் கிளாமர் காண்பித்து நடிக்காமல் நல்லதொரு பர்பாமென்ஸ் நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் நாயகியாக நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்த ரேவதி, அம்மா கணக்கு, ப.பாண்டி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் யுத்தம் சரணம் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஓரிரு சீரியல்களில் நடித்துள்ள ரேவதி, தற்போது அழகு என்றொரு கிராமத்து நெடுந்தொடரில் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பத்தலைவியாக அவர் நடித்து வரும் இந்த தொடரில் மையக் கேரக்டரில் நடிக்கும் ரேவதி, தனது குடும்பத்தில் நடக்கும் பெரிய பிரச்னைகளையெல்லாம் அனுபவத்தைக் கொண்டு எப்படி சிக்கல்களை சீராக்குகிறார் என்பதுதான் இந்த அழகு தொடரின் மையக் கதையாம். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா வியாபாரி குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

murugan -  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2017 - 15:30 Report Abuse
murugan துளியும் கிளாமர் காட்டாத நாயகி தினமலர் சர்டிபிகேட் கொடுக்குது . தேவர்மகன் படத்தில் உடம்பெல்லாம் கூசும் அளவிற்கு ,இப்ப இருக்கற சில நடிகைகள் கூட நடிக்க தயங்கும் படுக்கையரை காட்சியில் அன்றே நடித்தவர். புதுமை பெண் படத்தில் ஹீரோ உடைய கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து .... நான் இவர்களை தீயவள் என்று கூறவரவில்லை. அதற்காக சீதை அளவிற்கு புகழ்ந்து பேசுவைதை தான் என்னால் தாங்க முடியவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in