ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அபியும் அனுவும் என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் பணியாற்றும் சரிகம நிறுவனமே படத்தை தயாரித்துள்ளது. மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, ரோகினி உள்பட பலர் நடித்துள்ளார்கள். இது ஒரு உண்மை கதை என்கிறார் விஜயலட்சுமி. அவர் மேலும் கூறியதாவது:
மீண்டும் சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் நிறுவனமே படம் தயாரிக்க முன் வந்ததால் நான் மீண்டும் படம் இயக்க வந்து விட்டேன். அபியும் அனுவும் அமெரிக்காவில் ஒரு காதலர்களுக்கு நடந்த உண்மை கதை. இதை எங்கள் நிறுவன சேர்மனே சொன்னார். அவர் சொன்ன ஒன் லைனுக்கு திரைக்கதை எழுதி உருவானது தான் அபியும் அனுவும். அமெரிக்காவின் காதலுக்கும், நம்ம காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமே அது எப்படி இங்கே பொருந்தும் என்று நினைக்கலாம். அங்கு மட்டுமல்ல இங்கேயும் அது நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு இயக்குனருக்கே நடந்திருக்கிறது.
உலகில் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும் இது பொருந்தும். நிறைய காதல் கதைகள் வந்தாலும் இந்த காதல் புதிதாக இருக்கும், ரசிகர்களை ஷாக் அடிக்க வைக்கும். அப்படியொரு புது விஷயம் இருக்கும். படத்தை பார்த்து விட்டு வரும்போது உங்கள் நண்பர்களிலோ அல்லது உறவினர்களிலோ ஒருவருக்கு இப்படி நடந்திருப்பது தெரியும். என்கிறார் பி.ஆர்.விஜயலட்சுமி.