இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் 'அபியும் அனுவும்'. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் இதற்கு 'அபியுடே கத அனுவிண்டேயும்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழிலும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் பிரபு, சுகாசினி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்களை சமீபத்தில் இயக்குனர்கள் கௌதம் மேனனும் ஏ.ஆர்.முருகதாசும் வெளியிட்டார்கள். இன்று இந்தப்படத்தின் இரண்டு மொழிகளுக்கான டீசர்களை நடிகர்கள் ஜெயம் ரவியும், பஹத் பாசிலும் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தின் டீசரை பார்த்தபோது அதில் ஒரு பாடல் காட்சியில் ஒரே ஒரு ஷாட்டில் பியா மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார்,, அனேகமாக படத்தில் இவர் மொட்டைத்தலையுடன் இடம்பெறும் இன்னும் சில காட்சிகளும் இருக்கும் என்றே தெரிகிறது. வரும் செப்-22ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது..