Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்தில் ஓவியா?

10 ஆக, 2017 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Oviya-in-Vijay---ARMurugadoss-film

அட்லீ இயக்கத்தில் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் படத்தில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் 'ஸ்பைடர்' தெலுங்குப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பிஸியாக இருக்கிறார். 'மெர்சல்' படத்தில் விஜய்யும் தற்போது பிஸியாக இயங்கி வருகிறார். இந்தப் படங்கள் முடிவடைந்ததும், இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கவிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, தற்போது 'டிரென்டிங்கில் இருக்கும் பிக் பாஸ் புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருக்கிறாரா? அல்லது இரண்டு மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க இருக்கிறாரா? என்பது போன்ற அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பற்றிய புகழ்பாடல் உச்சத்தில் இருந்தபோது, டுவிட்டரில் இப்படி ஒரு கருத்து பகிரப்பட்டது. “யார் கண்டது? நாளைய நயன்தாரா, ஓவியாவாகவும் இருக்கலாம்” ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியானால், இந்த கருத்து உண்மையாகி விட வாய்ப்பிருப்பது போல் தோன்றுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Chris - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஆக, 2017 - 17:23 Report Abuse
Chris கண்டிப்பா தோல்வி தான் ....... பிக் பாஸ் ல நம்பர் ஒன் போலி, 100 % நடிப்பு ஓவியா தான்.
Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
10 ஆக, 2017 - 16:34 Report Abuse
Giridharan S இவங்களுக்கு என்ன உடம்பு நல்லா ஆயிடுச்சா அப்போ தற்கொலை முயற்சி என்பது டுபாகூர் பீசா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in