தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்களான இது நம்ம ஆளு, கதகளி ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்த.
எனவே, பட இயக்கத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு படத் தயாரிப்பில் இறங்கினார். அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம என்ற படம் பாண்டிராஜின் தயாரிப்பில் வளர்ந்தது.
தற்போது செம திரைக்கு வர தயாராகிவிட்டது. வள்ளிகாந்தின் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக பெண் தேடியபோது சந்தித்த அனுபவங்களை நகைச்சுவை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் சொல்லி இருக்கிறார். பாண்டிராஜுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே செம படம் தொடங்கப்பட்டது.
லிங்க பைரவி கிரியேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து பாண்டிராஜ் தயாரித்திருப்பதோடு, செம படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார். செம படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிப்பதோடுபடத்துக்கு இசையும் அமைத்துள்ளார். செம படத்தின் இசையை வரும் ஜூன் 9-ம் தேதி அன்று வெளியிட உள்ளனர். வெயில், ஆடுகளம், கொம்பன் படங்களுக்குப் பிறகு என்னிடமிருந்து கிராமத்து இசையில் செம ட்ராக் லிஸ்ட் இது என்று குறிப்பிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.