பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படம் குயின். 12 கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் சம்பாதித்த படம். இதில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை விகாஷ் பஹல் இயக்கி இருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதும். இதை இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முன்வந்தார்கள். அதில் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார்.
அதை தமிழில் முதலில் அவரே இயக்குவதாக இருந்தது, த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பின்னர் ரேவதி இயக்குவதாக கூறப்பட்டது. கங்கனா நடித்த கேரக்டரில் முதலில் தமன்னா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தமன்னா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "குயின் தமிழ் ரீமேக் டிராப் ஆகிவிட்டது உண்மைதான். இதற்காக நான் வருந்தவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதைகள் நிறைய வருகிறது. அவற்றில் நடிப்பேன்" என்று தமன்னா கூறியிருக்கிறார்.
ஆனால் "குயின் ரீமேக் கைவிடப்படவில்லை. தமன்னா கால்ஷீட்டில் பிரச்னை இருப்பதால் இன்னொரு நடிகை நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தயாரிப்பு தரப்பில் கூறுகிறார்கள். குயின் மலையாள ரீமேக்கில் அமலா பால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கு ரீமேக்கும் விரைவில் தொடங்க இருக்கிறது.