Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபத்தால் ரூ.60 கோடி நஷ்டம் - தமிழக அரசை குற்றம் சாட்டும் கமல்

29 மார், 2017 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Rs.60-crore-loss-in-Vishwaroopam---Kamal-blames-TN-Govt.,

விஸ்வரூபம் படத்தை அப்போதைய அரசு தடை செய்ததால் தனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் தன் படம் சம்பந்தமாக எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார். அதில் முக்கியமானது விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அப்போது பெரும் பிரச்னை எழுந்தது. இதனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக., அரசு தடை விதித்தது. பின்னர் பல தடைகளை தாண்டி அந்தப்படத்தை ரிலீஸ் செய்தார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல், தற்போது, அப்போதைய தமிழக அரசு மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...


‛‛விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது. பின்னர் சட்டப்பூர்வமாக அந்த தடை நீக்கப்பட்டது. இருந்தாலும் அப்போதைய அரசு படத்திற்கு மீண்டும் தடை விதித்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தடை நீக்கப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்காக எனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன், நான் அவமானப்படுத்தப்பட்டேன், இன்னும் சொல்லப்போனால் என்னை அழிக்கும் எண்ணம் கூட இருந்தது.


விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த தடையால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழலால் நாடு மூழ்கி கிடக்கிறது, அதனால் எதையும் சிறிதாக எடுத்து கொள்வதுடன் மறக்ககூடியதாகவும் உள்ளது. மறதி ஒரு தேசிய வியாதி. நான் எதையும் மறக்க மாட்டேன். என்னுடைய வருமானத்தை மூடி மறைக்காமல், நேர்மையான முறையில் வரி கட்டும் குடிமகன் நான். அப்படிப்பட்ட எனக்கு இது மிகப்பெரிய இழப்பு தான். பொதுமக்களுக்கு நன்றி, நான் இன்னும் உலாவி கொண்டிருக்கிறேன். அடுத்தப்படியாக விஸ்வரூபம்-2 பாகம் வெளியாக உள்ளது, இதற்கு எந்த பிரச்னையும் வராது என்று நம்புகிறேன்.


இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (57) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (57)

Vaal Payyan - Chennai,இந்தியா
30 மார், 2017 - 13:10 Report Abuse
Vaal Payyan வரலாறு மறந்துட்டு பேசுறீங்க ... விஸ்வரூபத்துக்கு ரெண்டு பிரச்சனை வந்தது ... ஒன்னு முஸ்லீம் அமைப்புக்கள் பண்ணியது அது சரியானது ... இன்னொன்னு இவரு தனியார் தொலைக்காட்சில காசு கொடுத்து படம் ரிலீஸ் ஆகிற அன்னைக்கே பார்க்கும் வசதி பண்ண ஒப்பந்தம் வேணும் என்றது ?? அதற்க்கு எல்லா தியேட்டர் மற்றும் விநியோகிஸ்தர்கள் எதிர்த்தார்கள் ... இவரும் என் பொருளை விற்கும் உரிமை எனக்கு உள்ளது என்றார் .. அவர்கள் நாங்கள் படத்தை திரை இட மாட்டோம் என்றனர் இவர் நாட்டை விட்டே போய் விடுவேன் என்றார் ...இதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இப்போ அறுபது கோடி நஷ்டம் என்கிறார் மறதிக்கு தமிழனை விட சிறந்த இனம் இருக்க முடியாது
Rate this:
Natarajan Krishnaier - Bhopal,இந்தியா
30 மார், 2017 - 10:23 Report Abuse
Natarajan Krishnaier சுப்பாராமணிய சாமி சரியாகத்தான் சொன்னார் : இந்த ஆள் ஒரு சுயநலவாதி என்று. இவனையெல்லாம் ஒரு முக்கியஸ்தன் என்று கூத்தாடும் தமிழன்தான் முட்டாள்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
30 மார், 2017 - 10:18 Report Abuse
skv<srinivasankrishnaveni> வேலையத்தவனுக்கு வெங்காயம் பொழப்பத்தவனுக்கு பெருங்காயம் அதுபோல திட்டமெல்லாம் பிரமாதமா இருக்கும் ஆனால் ஆட்டம் எடுத்து சம்பந்தமே இல்லாது காட்சியை வச்சு மக்களை பேக்குகள் என்று நெனெச்சால் லாஸ் தான்வரும் இதுகளெல்லாம் உலகமே முழுக்க ரிலீஸ் பண்ணா ஒரே வாரத்துலே வசூலாகும் காசு எல்லாம் என்ன காந்தி கணக்கா கிளைமாக்ஸ் இருக்கே எல்லாம் படு சொதப்பல் தான் லாஸ் என்பதெல்லாம் சும்மானாச்சுக்கும் சொல்ற சில்லரைப்பேச்சுக்களேதான்
Rate this:
Paradesi - Mumbai,இந்தியா
30 மார், 2017 - 10:06 Report Abuse
Paradesi உண்மையாக இருந்தால் ..இந்த காலத்தில் ..நஷ்டம்தான் ...
Rate this:
Power Punch - nagarkoil,இந்தியா
30 மார், 2017 - 09:35 Report Abuse
Power Punch ஜெயலலிதா மிக பெரிய ஆளுமை..மிக்க சிறந்த தலைவர்...அவர் மறைவிற்கு பின் நடப்பவை எல்லாம் நமக்கு உணர்த்துகிறது...
Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in