ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பை புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. படத்தை துவங்கியது முதல் படக்குழு இதுவரை பட தலைப்பை அறிவிக்காத நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்படத்திற்கு சம்பவாமி யுஹே என பெயரிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு மற்றும் தமிழ் என பதிப்பிற்கும் சேர்த்து முருகதாஸ் தேர்வு செய்துள்ள இந்த தலைப்பு மகேஷ் பாபுவிற்கு பிடிக்கவில்லையாம். இதனால் தலைப்பை மாற்றும்படி மகேஷ்பாபு முருகதாஸிடம் வலியுறுத்தி வருவதால் மகேஷ் பாபுவிற்கும் முருதாஸிற்கும் பிடித்தாற்போல் ஒரு தலைப்பை படக்குழு தேடி வருகின்றது. மேலும் முருகதாஸ் சம்பவாமி யுஹே டைட்டிலுக்கே அதிக முன்னுரிமை தருவதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.