Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் 3ல் பாட்ஷா மறு வெளியீடு

18 பிப், 2017 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Baasha-digital-version-releasing-on-March-3

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் பாட்ஷா. 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படம். இதன் உரிமத்தை வாங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனம் வாரம் ஒரு முறை பாட்ஷாவை ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு முறையும் பாட்ஷா ஒளிபரப்பாகும்போது அதன் டிஆர்பி ரேட்டிங் உயர்கிறது. அந்த அளவிற்கு பாட்ஷா படத்தை பார்க்க உட்கார்ந்தால் எழுந்திருக்க யாருக்கும் மனம் வராது.


இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா விரும்பினார். அதற்கு ரஜினி உடன்படவில்லை. பாட்ஷாவையே ரீமேக் செய்ய விரும்பினார். "ஒரே ஒரு பாட்ஷா அதுமாதிரி இனி உங்களாலும் இயக்க முடியாது என்னாலும் நடிக்க முடியாது" என்று கூறிவிட்டார். இதனால் ஒரிஜினல் பாட்ஷா படத்தையே நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். டிஜிட்டல்படுத்தி 5.1 சவுண்ட் டிராக் இணைத்திருக்கிறார்கள். வருகிற மார்ச் 3ந் தேதி சத்யா மூவீஸ் வெளியிடுகிறது. சென்னையில் மட்டும் புதிய படங்களுக்கு இணையாக 30 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 250 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.


பாட்ஷாவில் ரஜினியுடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்தராஜ், சத்யப்ரியா, யுவராணி, சரண்ராஜ், கிட்டி, தாமு நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்தார். பி.எஸ்.பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தேவா இசை அமைத்திருந்தார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சின்ன பட்ஜெட் படங்களையும் கவனியுங்கள்: வெற்றிசின்ன பட்ஜெட் படங்களையும் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Thamizh -  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2017 - 16:32 Report Abuse
Thamizh Ivan padatha theater la poi paakuradhum, sasikalava CM akuradhum onnu.... namma kasa pudungura dhrogigal
Rate this:
18 பிப், 2017 - 15:13 Report Abuse
Vasunagai சூப்பர் தலைவா
Rate this:
kovai - kovai,இந்தியா
18 பிப், 2017 - 13:19 Report Abuse
kovai இந்த படத்தில் வரும் பாடல் வரி போல ''ஒரே ஒரு பாட்சதான்'' ஊருக்கெல்லாம்.. ரண்டாம்பாகமோ, ரீமேக்கோ இது போல் அமையாது..?
Rate this:
And - TN,இந்தியா
18 பிப், 2017 - 12:53 Report Abuse
And என்னென்னவோ செய்து பழைய படி இவர் படத்துக்கு தியேட்டருக்கு கூட்டம் வருகிறதா என்று பார்க்கிறார்களா? ஆனால் இவர் உண்மையில் தைரியசாலி தான். __லி பட இயக்குனரின் படத்திலேயே மீண்டும் நடிக்கிரறாராமே? மக்கள் என்ன ஊடக செய்திகளை பார்த்தவுடன் நம்பும் ரசிகர்களா? ஷங்கர் திறமையால் அடுத்த படம் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இவருடைய கேரியர் Downtr ல் தான் உள்ளது. அதை இவர் ஒப்பு கொள்ள மாட்டார், மீடியாவும் விடாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in