'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டார்லிங் - 2 படத்தின் கதாநாயகர் ரமீஸ் ராஜா மீண்டும் நாயகராக நடிக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்கத்தில் உருவாகும் விதி -மதி உல்டா. "மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால், மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால்? அந்த விதியை மதியால் வெல்ல முடியுமா..?" இந்தக் கேள்விக்கான விளக்கம் தான் படத்தின் கதையாகும்.
ரமீஸ் ராஜா ஜோடியாக, ஜனனி ஐயர் நடிக்க, ரைட் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ., இசைஞர் ஜி.வி.பிரகாஷ் குமார் "தாறுமாறா ஒரு பார்வை பார்க்க... நேர்மாறா என்ன அடிச்சு தூக்க... என்ற பாடலை அஸ்வின் எனும் இளம் இசையமைப்பாளரின் இசையில் "நட்புக்காக " பாடியிருக்கிறார்.
அதே மாதிரி, கானாபாலா, அந்தோணிதாஸ் இருவரும் இணைந்து "நான்தான்டா மாஸ்... நீதான் என்பாஸ் ..." எனும் குத்துப் பாடலையும் இப்படத்திற்காக மேற்படி, இசையமைப்பாளரின் இசையில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், "விதி - மதி உல்டா" படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ரமீஸ் ராஜா - ஜனனி ஐயர் ஜோடியுடன் டேனியல் பாலாஜி, கருணாகரன் , சென்ராயன், சித்ரா லட்சுமணன், பேராசியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்க வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!