Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!

16 ஆக, 2011 - 10:25 IST
எழுத்தின் அளவு:

திருநின்றவூரில் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் கட்டியுள்ள எம்.ஜி.ஆர்., கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று(15.08.11) நடந்தது. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்., திரையுலகில் மட்டுமல்லாது, ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களால் மக்கள் மனதில் நிரந்தர, "ஹீரோவாக என்றும் வாழும் எம்.ஜி.ஆருக்கு, ரசிகர்கள், கட்சித்தொண்டர்கள் என்ற எல்லையைத் தாண்டி, ஏராளமானவர்கள் பக்தர்களாக மாறி அவர் புகழ்பாடி வருகின்றனர்.

சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன், 50. எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான இவர், எம்.ஜி.ஆருக்கு திருநின்றவூர், நத்தமேடு, செல்லியம்மன் சாலையில், "எம்.ஜி.ஆர்., ஆலயம் என்னும் பெயரில் கோவில் கட்டியுள்ளார். இக்கோவிலின், கும்பாபிஷேகம் நேற்று காலை 9.15 மணிக்கு நடைபெற்றது. வழக்கமான கோவில் கும்பாபிஷேத்தை போலவே, கடந்த இரண்டு நாட்களாக மோகன் சிவாச்சாரியார் மற்றும் ஆழ்வை ராஜப்பாசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் கோவில் வளாகத்தில் நடந்தன.

கும்பாபிஷேகத்தின் போது கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார். அப்போது, திரளாக குழுமியிருந்த பக்தர்கள், "எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே என்று கோஷமிட்டனர். மேலும், இரண்டு அடி உயரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., உற்சவர் சிலைக்கு பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் விஜயனின் மனைவி சுதாவிஜயன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் பேரன் பிரதீப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கும்பாபிஷேக விழாவில் சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர்., பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

சந்துரு - Paris,பிரான்ஸ்
17 ஆக, 2011 - 19:31 Report Abuse
 சந்துரு சில பேர் நிசமாகவே இருந்தார்களா இல்லையா என்றே தெரியாமல் புராண நாயகர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கே கோவில் கட்டி கும்பிடும்போது, நாம் வாழ்ந்த காலத்தில், நாம் அறிந்த வாழும்போதே "ஒரு குற்றம் இல்லாத மனிதன், அவன் கோவில் இல்லாத இறைவன்" என்று வாழ்ந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில் கட்டி வணங்குவதில் தவறு ஏதுமில்லை!
Rate this:
anbarasu - madras,இந்தியா
17 ஆக, 2011 - 16:34 Report Abuse
 anbarasu எவனுக்கும் எம்.ஜி .ஆர் அ பத்தி பேச தகுதி கிடையாது. அவர் எம் .ஜி. ஆருக்கு கோவில் கட்டினால் ,அது அவருடைய இடத்தில , அவருடைய பணத்தில் கட்டுகிறார். எவனுடைய இடத்தையும் அபகரிக்கவில்லை, எவனிடம் பணம் கேட்கவில்லை. இன்னைக்கும் பல குடும்பங்களில் தலைவனாகவும் , கடவுளாகவும் வாழ்கிரவர்க்கு கோவில் கட்டுவதில் எந்த தவறும் கிடையாது
Rate this:
 முருகு பத்மநாபன் பிரான்சு எம்.ஜி.ஆர் தன் தாய்க்கு வீட்டில் கோயில் கட்டி கும்பிட்டவ்ர்தான் எம்.ஜி.ஆர். மாதா,பிதா,குரு தெய்வம்.ஆகவே மாதா பிதாவை வீட்டில் வைத்து வணங்கியும், தனக்கு நல்ல வழி காட்டிய குருவாகிய எம்.ஜி.ஆருக்கு நாட்டில் கோயில் கட்டியும் வணங்குகிறார் கலைவாணன்.அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.இழ்ட்ட தெய்வத்தை கும்பிடுபவர்களும் உண்டு, தெய்வமே இல்லை என்ற நாத்திகவாதிகளும் உண்டு.ஆக நம்பிக்கைதான் வாழ்க்கை."என்னை நம்பி கெட்டவர்கள் கிடையாது நம்பாமல் கெட்டவர்கள் இருக்கலாம்"என்று எம்.ஜி.ஆர் சொல்லுவார். ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள் வணங்குகிறோம். அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்காத ,மன காய படுத்தாத எந்த செயலும் நல்ல செயல்தான். "நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் " என்பது எம்.ஜி.ஆர் வாக்கு. அது எங்களுக்கு வேத வாக்கு.ஆகவே அன்பர்கள் பக்தர்களை புண் படுத்தாமல் இருபது நலம்.
Rate this:
M G R பரம ரசிகன் - dubai damaar santhu ,இந்தியா
16 ஆக, 2011 - 15:13 Report Abuse
 M G R பரம ரசிகன் நாட்டில் தலைவர்களுக்கு சிலை வைப்பது தவறு கிடையாது;;;;இது போல் கோவில் கட்டுவது முட்டாள்தனமான செயல்;;;;விவரம் தெரியாத மக்கள் தான் இவருக்கு கோவில் கட்டினார்கள்;;;ஆனால் இந்த விவரம் தெரிந்த ஆளுக காசுக்கா பூஜை வேலை பண்ணி இருக்கிறானுக;;;;இவனுகளை சொல்லி குத்தம் கிடையாது;;;சாமியே சரணம் M G R ;;;;;;நம்ம சென்னை மக்களை காப்பாத்து.
Rate this:
M.ABDUL KAPUR - manama,பஹ்ரைன்
16 ஆக, 2011 - 14:16 Report Abuse
 M.ABDUL KAPUR கோயில் கட்ட கூடிய அழவில் எம்ஜியார் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார். கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாத்த வேண்டும். இரண்டு தலைமுறை தமிழஹா மக்களை தன் சினிமாவுக்கு அடிமையாக்கி போனவர்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in