‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சந்தானத்தைத் தொடர்ந்து லொள்ளுசபாவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஜீவா. குருவி, மதராசப்பட்டினம், ஆட்டநாயகன், இது என்ன மாயம் உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்தவர். அதோடு ரஜினி குரலிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். சந்தானம் போன்று முன்னணி காமெடியனாகவில்லை என்றபோதும், சமீபகாலமாக சந்தானம் காமெடியில் இருந்து விலகி கதாநாயகனாகி விட்டதைத் தொடர்ந்து, ஜீவாவும் தற்போது ஆரம்பமே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகம் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும், இதில் ஆரம்பமே அட்டகாசம் படம் காமெடி கலந்த கதையில் உருவானபோதும், ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறாராம் ஜீவா. அந்தவகையில், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கன்னட நடிகை சங்கீதாவுடன் கிட்டத்தட்ட 10 லிப்-லாக் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். அதுவும் கமல் படங்களில் இடம் பெறும் காட்சிகளுக்கு இணையாக அமைந்துள்ளதாம். அந்த வகையில், இந்த படம் இளவட்ட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்கிறார்கள்