Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப் போகாதே...60 லட்சம் ஹிட்ஸ் யாருக்காக ?

29 பிப், 2016 - 15:25 IST
எழுத்தின் அளவு:
For-whom-ThalliPogathey-got-60Lakhs-hits

'தெறி' டீசர் ஒரு பக்கம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருந்ததால், மறு பக்கம் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் 'தள்ளிப் போகாதே..' பாடலும் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது பலராலும் கவனிக்கப் படாமல் போயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் 'தெறி' பற்றிய பேச்சுத்தான் கொஞ்சம் ஓவராக இருந்தாலும், ஒரு டீசருக்குக் கிடைத்த வரவேற்பு ஒரு பாடலுக்கும் அதற்கு நெருக்கமாகக் கிடைத்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.


'தெறி' படத்தின் டீசர் பிப்ரவரி 5ம் தேதி யூ டியூபில் வெளியானது. தற்போது வரை 90 லட்சம் ஹிட்ஸ்களை அந்த டீசர் பெற்றுள்ளது. அதே சமயம் கடந்த மாதம் 16ம் தேதி 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் சிங்கிள் பாடலான 'தள்ளிப் போகாதே...' டியூபில் வெளியானது. தற்போது வரை இந்த பாடலுக்கு 61 லட்சம் ஹிட்ஸ்கள் கிடைத்துள்ளது.


இப்படிப்பட்ட ஒரு வரவேற்பு இந்த பாடலுக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணம் என்ன?. ஏ.ஆர்.ரகுமான் இசையா, தாமரையின் வரிகளா, ராப் பாடல் வரிகளை எழுதிய ஏடிகே-வா, பாடலைப் பாடியுள்ள சித் ஸ்ரீராம், அபர்ணா நாராயணன், ஏடிகே ஆகியோரா அல்லது இப்படி ஒரு பாடலை ரகுமானிடம் இருந்து கேட்டுப் பெற்ற கௌதம் மேனனா?. ஆனால், அதற்குள் இந்தப் பாடலின் ஹிட்ஸ்களுக்கு சிம்பு ரசிகர்கள் தங்களது வெற்றி போல ஓவராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவரையும் மீறி, அந்தப் பாடலில் வரும் மஞ்சிமா மோகன் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. தற்போதைக்கு 'தள்ளிப் போகதே...' பாடலின் வெற்றிக்கு ரகுமான் மட்டுமே காரணம் என்பதை இசை ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridhar Ramdoss - Aruppukottai,இந்தியா
01 மார், 2016 - 09:14 Report Abuse
Sridhar Ramdoss ஒருவனை எப்படி அமுக்குவது, எப்படி சாய்ப்பது, எப்படி காலை வாரி விடுவது என்பதிலேயே தினமலர் குறியாக இருக்கிறது. எந்த ஒரு படமோ பாடலோ அதில் பல பேருடைய உழைப்பு இருக்கிறது. அதில் ஒருவனை உயர்த்தி ஒருவனை தாழ்த்தி ஏன் பேச வேண்டும்? சிம்புவை எப்படியாவது அதல பாதாளத்தில் தள்ளவேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவு உள்ளது.
Rate this:
Daniel - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
01 மார், 2016 - 00:29 Report Abuse
Daniel Sid Sriram is a Fabulous Singer. He is a Deserved person of this song.Because Every Notes Was Unique.He Sung Very well....
Rate this:
Mala - Jaffna,இலங்கை
29 பிப், 2016 - 19:08 Report Abuse
Mala Simbu rock
Rate this:
Durai Rajulu - Pondicherry,இந்தியா
29 பிப், 2016 - 17:40 Report Abuse
Durai Rajulu இப்படி பார்த்தா தெறி ஹிட்ஸ் யாருக்கு?,ஐ ஹிட்ஸ் ரகுமானுக்கா, சங்கருக்கா, விக்ரமுக்கா? நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தா சிம்பு இல்லை ரஜினிக்கே கேள்விதான் கிடைக்கும்.
Rate this:
S.sheik kader - Thuvarankurichy  ( Posted via: Dinamalar Android App )
29 பிப், 2016 - 16:50 Report Abuse
S.sheik kader ஏஆர் ரஹ்மான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in