Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

07 டிச, 2010 - 22:42 IST
எழுத்தின் அளவு:

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம். யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இது குறித்த தகவல்களுக்கு மறுபக்கம் பக்கத்தை பார்க்கவும்...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140496 

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

SIVAM - SUNGAI PETANI,மலேஷியா
30 நவ, 2011 - 19:05 Report Abuse
 SIVAM நடிப்புக்காக தன் உயிரையும் கொடுப்பார் என் கமல்.எனக்கு தெரிஞ்சி கடவுளே தப்பு செஞ்சிட்டாரு.காரனும் கமல தமிழனா படச்சிட்டாறு. வடிவேலு சொல்லறமாதிரி உங்களையெல்லாம் எனக்கு பாக்க பாவமா இருக்கு......
Rate this:
தியாகராஜன் - tiruvarur,இந்தியா
11 அக், 2011 - 17:55 Report Abuse
 தியாகராஜன்    பணம் மட்டும் குறிக்கோள் என்று வாழ்வது கமல் அல்ல. இதே கமல் தான் அன்பே சிவம் என்கிற அருமையான படம் எடுத்தார். அந்த படத்துக்கு இப்ப கண்டனம் தெரிவிக்ற எத்தன பேர் பாராட்டு தெரிவிசீங்க. அவர் எய்ட்ஸ் பத்தி விழிப்புணர்வு எற்படுத்றாரு. அதுக்கு யார் ஆதரவு தெரிவிசீங்க. ரசிகர் மன்றங்கள நற்பணி மன்றமா மாத்துன முதல் நடிகர் அவர்தான். காசு வேணும் என்று நெனக்ற யாரும் இப்டி செய்ய மாட்டங்க. கமலை புரிந்து கொள்ள தெரியாத மூடர்களை அவர் சட்டை செய்வதே இல்லை; இப்படிக்கு பகுத்தறிவாளன்
Rate this:
பாலா ஸ்ரீனிவாசன் - chennai ,இந்தியா
11 டிச, 2010 - 16:41 Report Abuse
 பாலா ஸ்ரீனிவாசன் தான் பிறந்த இனத்தைப்பற்றி அவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை இது போல ஏதாவது பேசி தான் ஒரு புரட்சியாளர் என்று காட்டிக்கொள்ளும் புரட்டு நாயகன், பிதற்றல் நாயகன். பெரிய அறிவு ஜீவின்னு வேற நெனைப்பு! ஒரு ரெண்டு கல்லு வந்து விழுந்துச்சுன்ன நெத்தில விபுதியோட கிளம்ப ஆரம்பிச்சுடுவான். தைரியம் இருந்தால் மத்த மதங்களைப்பற்றி கிண்டல் செய்து பாக்கட்டுமே! பிறப்பில் பிழை இருந்தால் இந்த மாதிரிதான் எதாவது நடக்கும்.. க மல ஹாசன் !
Rate this:
anniyan - moscow,ரஷ்யா
10 டிச, 2010 - 21:28 Report Abuse
 anniyan ஹலோ பாஸ் .........என்னோமோ இதுக்கு முன்ன தமிழ் ல காமம் பற்றி பாடே வராத maari ................. poonga pooi polapa parunga பாஸ்..........
Rate this:
10 டிச, 2010 - 12:00 Report Abuse
 பன்னீர் செல்வம். வீ கமல் ஒரு முட்டாள், லூசு, மடையன், கிறுக்கன். இப்படிதான் உலகில் இருந்த அணைத்து அறிவாளிகளையும் மக்கள் கூறினார்கள். அதனால் நீங்கள் அவர்களை பற்றி கவலை பட வேண்டாம். காசுக்கு ஓட்டுகளை விற்கும் மட்டமான வியாபாரிகள் கமலை பற்றி பேசாதீர்கள்.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in