அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல், படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மற்றபடி படத்தைப்பற்றி அவர் பெரிதாக எந்த கருத்தும் சொல்லவில்லை.
இந்த நிலையில், கோச்சடையான் பற்றி சிம்பு தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது, கோச்சடையான் படத்தை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கெல்லாம் படம் இல்லை. இந்த படத்தை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடக்கூடாது, அதேசமயம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக செளந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் என்று தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.
சிம்புவின் இந்த எதிர்மறையான விமர்சனத்தினால், கோச்சடையான் புகழ் பாடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களும், அபிமானிகளும் கொதிப்படைந்துள்ளனர். இருப்பினும், கோச்சடையான் டைரக்டரான செளந்தர்யாவோ, சிம்புக்கு எதிராக எந்தவொரு வார்த்தையையும் பயன்படுத்தாமல், தங்களது கருத்துக்கு நன்றி என்று ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுள்ளார்.