‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
கலையுலகில் காலடி எடுத்து வைத்தாலே நைட் பார்ட்டி, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா வரைக்கும் போய்த்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அதுவும் நாயகிகளின் நிலை கொஞ்சம் மோசம்தான். முதல் படத்தில் நடித்து முடிக்கும் வரை அந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடங்கி, இதுபோன்ற லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா பார்ட்டிகளுக்கு கூப்பிடும் நேரத்தில் எல்லாம் போக வேண்டும். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டால் அழைப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் பிரீமியர் ஷோ, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் பார்ட்டிகளில் அடிக்கடி தலைகாட்டி வந்தவர் நடிகை லட்சுமி ராய். கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் காதல், கங்குலியுடன் நெருக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும், எதைப்பற்றியும் கவலைப்படால் செம ஜாலியாக பார்ட்டி, கூத்து என காலத்தை கழித்து வந்த லட்சுமி ராய் இப்போது புதுப்பழக்கம் ஒன்றை கற்றிருக்கிறாராம். அதாகப்பட்டது... இனிமேல் பிரீமியர் ஷோ, லேட் நைட் பார்ட்டிக்கெல்லாம் அடிக்கடி போகக் கூடாது என்பதுதான் அந்த பழக்கம். அதிசயமாக எப்பவாவது கலந்து கொண்டால்தான் அதற்கும் மரியாதை என்பதால்தான் இந்த முடிவாம்.