Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு பயம்: இயக்குனர் ஞானராஜசேகரன் சிறப்பு பேட்டி!

28 ஏப், 2014 - 14:51 IST
எழுத்தின் அளவு:

தி.ஜானகிராமனின், மோகமுள், மகாகவி பாரதியின் வறுமை வாழ்கை. பெரியார் ஈ.வே.ராமசாமியின் போராட்ட வாழ்க்கை இவற்றை திரைப்படமாக தந்து புகழ்பெற்றவர் ஞானராஜசேகரன். தற்போது கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார். படத்தின் பணிகளை முடித்துவிட்டு திருப்தியோடு இருக்கும் ஞானராஜசேகரன் அளித்த சிறப்பு பேட்டி:


* தொடர்ந்து வரலாற்று படங்களையே எடுக்கிறீர்களே மற்ற கதை களங்களை தேர்வு செய்வதில்லையே ஏன்?


இந்த கேள்வி என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. பாரதி, பெரியார் வாழ்க்கையை எடுத்து முடித்த பிறகு சுமார் 18 தலைவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க வாய்ப்பு வந்தது. எத்தனை கோடி வேணாலும் தருகிறோம் என்று வந்தார்கள். எல்லாமே ஜாதி தலைவர்கள். ஜாதி சங்கங்கள் பார்க்க நான் படம் எடுக்க முடியாது. நான் படமாக எடுக்க இருப்பவர்களை முதலில் நான் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன். அடுத்து ஒரு நல்ல காதல் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். என்னை சந்தித்த சில வெளிநாடு வாழ் இளைஞர்கள் ஒரு படம் இயக்க வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். நான் என்னிடம் இருந்த காதல் கதையை சொன்னேன். அது வேண்டாம் வாழ்க்கை வரலாற்று படம்தான் வேண்டும் என்றார்கள். வள்ளலார், ராமானுஜர் கதையை சொன்னேன். அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் ராமானுஜன் கதை.


* பாரதி, பெரியார் போன்று ராமானுஜர் வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் இருக்கிறதா?


இருக்கிறது. ஆனால் பாரதி, பெரியாரை தெரிந்த அளவிற்கு ராமானுஜரைத் மற்றவர்களுக்கு தெரியாது. ராமானுஜரைப் பற்றி தீவிரமாக படித்து ஒரு கட்டத்தில் நான் அவராகவே மாறி உருவாக்கியதுதான் ராமானுஜன் ஸ்கிரிப்ட். ஜீனியசாக பிறந்த ஒருவனை இந்த சமூகம் எப்படி நிராகரிக்கிறது. அவனை சாதாரண மனிதாக்க பார்க்கிறது என்பதை ராமானுஜனின் வாழ்க்கை சொல்லும். கணிதத்தில் மேதையாக திகழ்ந்தவரை அவரது பெற்றோரும், உற்றோருமே புறக்கணித்திருக்கிறார்கள். ராமானுஜரின் கணித புதிர்களில் இன்னும் 30 சதவிகிதம் தீர்க்கப்படாமலே இருக்கிறது. அப்படிப்பட்டவனின் வாழ்க்கை 33 வயதிலேயே முடிந்துவிட்டதென்றால் அதற்குள் எத்தனை விஷயம் இருக்கும். அதில் தேர்ந்தெடுத்தவற்றை திரைக்கதையில் வைத்திருக்கிறேன்.


* அதுசரி ராமானுஜரின் கதை இந்தக் காலத்திற்கு அவசியமானது என்று கருதுகிறீர்களா?


கட்டாயம் அவசியம். இன்றைக்கு குழந்தைகளுக்கு என்ன படிப்பு வருகிறது என்பதை பற்றி கவலைப்படாமல் தனது ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இன்றைய கல்வி அமைப்புக்கு ஜீனியஸ்கள் தேவையில்லை, எல்லா சப்ஜெக்டிலும் சராசரி மதிப்பெண் எடுத்து பாசாகும் மாணவர்கள்தான் தேவை. பிறகு எப்படி தலைவர்கள் உருவாவார்கள், ஜீனியஸ்கள் உருவாவார்கள். ராமானுஜனின் கதை. ஒரு திறமையான மனிதனை இந்த சமூகம் எப்படி அடக்கி அழித்தது என்பதன் சான்று.


* ராமானுஜன் வேடத்தில் நடிக்க மாதவன் மறுத்தாராமே உண்மையா?


ஸ்கிரிப்ட் தயாரானதுமே மாதவனை கேட்டது உண்மைதான். அவர் அப்போது ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க ரெடியாகிக் கொண்டிருந்தார். அதனால் அவரால் நடிக்க முடியவில்லை. நானும் வற்புறுத்தவில்லை. இன்னும் சில ஹீரோக்களையும் அணுகினேன். எல்லோருமே என் படத்தில் நடிக்க ஆசையுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தால் அதன் பிறகு இமேஜில் மாறுதல் ஏற்பட்டு கமர்ஷியல் படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயம் இருக்கிறது. ஆனால் கேரளாவில் இதுபோன்ற படங்கள் என்றால் மம்முட்டியும், மோகன்லாலும் சம்பளம் வாங்காமல்கூட நடிப்பார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும்.


* இப்போது வெற்றி பெறும் படங்களின் தரத்தை பார்க்கும்போது ராமானுஜன் வணிக ரீதியில் வெற்றி பெறும் என்று எப்படி நம்புகிறீர்கள்?




நான் இயக்கிய பாரதியும், பெரியாரும் வெற்றி படங்கள்தானே. அதை வரவேற்று ரசித்த மக்கள் இதையும் கண்டிப்பாக வரவேற்பார்கள். தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டும்தான் ஒரே மாதிரியான ரசிப்பு தன்மை கொண்டவர்கள். சென்னையில் எந்த சீனுக்கு கைதட்டுகிறார்களோ அதே சீனுக்கு நெல்லையிலும் கைதட்டுவார்கள். மலையாளத்தில் அப்படி இல்லை திருவனந்தபுரத்தில் கைதட்டும் சீனுக்கு கொச்சி ரசிகர்கள் கைதட்டமாட்டார்கள். இந்தி படங்கள் எல்லா மாநிலத்திலும் ஒரே மாதிரி ஓடுவதில்லை. சீரான ரசிப்பு தன்மை கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் நல்ல படங்களை அவர்கள் ரசிப்பார்கள். படத்தை அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்வதுதான் சற்று சிரமமான வேலை. படத்தை பற்றி அவர்கள் தெரிந்து கொள்கிறவரையிலாவது படம் தியேட்டரில் இருக்க வேண்டும். அதுதான் பிரச்னை.


* குறைந்த எண்ணிக்கையில் படங்கள் எடுத்திருந்தாலும் அதிக விருதுகளை பெற்றிருப்பது பற்றி...?




விருதுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவார்ட் டைரக்டராக இருப்பதை விட மக்கள் டைரக்டராக இருப்பதையே விரும்புகிறேன்.


* பெரிய தலைவர்களின் வாழ்க்கையை சின்ன பட்ஜெட்டில் எடுக்கிறீர்கள் என்று குற்றச்சாட்டு உங்கள் மீது இருக்கிறதே?




நான் விரும்பியா எடுக்குறேன். கோடிக் கணக்குல செலவு பண்றமாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் நானும் காந்தி படம் மாதிரி பாரதி படத்தை எடுத்திருப்பேன். என் தயாரிப்பாளரின் நிலைமையை உணர்ந்துதான் நான் படம் எடுக்குறேன். ஆனால் ராமானுஜன் படத்தை பொறுத்தவரையில் நான் இதற்கு முன் எடுத்த படங்களை விட பட்ஜெட்டில் பத்து மடங்கு பெரிது. என் மகளும், மருமகனும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதால் கட்டுப்பாடு இல்லாமல் எடுத்திருக்கிறேன். இதற்கு முன்பு செருப்புக்கு தக்கபடி காலை வெட்டிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் காலுக்கு தக்கபடி செருப்பு தைத்திருக்கிறேன். எப்படி படம் எடுத்தாலும் அந்த படத்தின் ஜீவனை எனக்குள் வைத்துக் கொள்கிறேன். பட்ஜெட் என்பது பளபளக்கிற மேல் சட்டைதான்.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in