Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...?

09 ஜூன், 2026 - 03:08 IST
எழுத்தின் அளவு:
Is-Rajinikanth-playing-a-five-rupee-doctor...
Advertisement

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கதை, இயக்குனர் தேர்வு காரணமாக சில மாதங்களாக தத்தளித்து வந்தது. முதலில் இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. அவர் சில காரணங்களால் விலக, டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. அவரும் ஒரு தெலுங்கு பட பிரச்னை, கதை பிரச்னையால் விலக, அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கப்போகிறார் என்று கூறப்பட்டது. ஆனாலும், கதை விஷயத்தில் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை என்று தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜ்கமல் ஆபீசில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பட போட்டோசெஷன் நடந்துள்ளது. அதில் டாக்டர் கெட்அப்பில், பக்கா மாஸ், ஸ்டைலில் போட்டோசெஷன் எடுத்த தகவல் கசிந்துள்ளது. இதனால், அந்த படத்தில் ரஜினி டாக்டராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தனது 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையில் 172 படத்தில் ரஜினிகாந்த் பல்வேறு கேரக்டரில் நடித்தாலும், இதுவரை டாக்டராக நடித்தது இல்லை. சந்திரமுகியில் அவர் டாக்டர் என்றாலும் வேறு டாக்டர். இதில் முழு நீள டாக்டர் கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இன்னும் சிலரோ வட சென்னையில் ஜெயசந்திரன், திருவேங்கடம் என இரண்டு டாக்டர் பிரபலம். அவர்கள் ஐந்து ரூபாய் டாக்டர் என மக்களால் அழைக்கப்பட்டனர். ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்தனர். ஐந்து ரூபாய் மட்டுமே பீஸ் ஆக பெற்றனர். இரண்டு பேருமே இப்போது மறைந்துவிட்டனர். இவர்களின் கதையை தான் அஷ்வத் எடுக்கிறார். சினிமாவுக்கு தக்கப்படி மாற்றம் செய்து இருக்கிறார். இந்த கதைக்காகவே அஷ்வத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

இந்த மாதம் 26ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். தலைப்பில் டாக்டர் என்ற வார்த்தை இருக்க வாய்ப்பு அதிகமாம். இதில் ரஜினி மகனாக இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் ... வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் வெளியீட்டிற்குப் பின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap