பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பின் மணிரத்னம் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இவர்கள் இணையும் படத்தில் முதல்முறையாக சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க மணிரத்னம் முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால், திரைக்கதையில் சில மாற்றம் செய்வதால் தள்ளி வைத்தார். இதனால் தியாகராஜ குமார ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' படத்திற்கு விஜய் சேதுபதி ஜூலை மாதம் வரை கால்ஷீட் தந்துள்ளார்.
இப்போது மணிரத்னம் தரப்பில் விஜய் சேதுபதியிடம் படப்பிடிப்பு தொடங்க பேசி உள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி தனது தரப்பில் நடந்த மாற்றங்களை கூற மணிரத்னமும் புரிந்து கொண்டு தனது படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளார்.