அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

சினிமா பிரபலங்கள் ஜிம், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போதும், விமான நிலையங்களுக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பப்பராசிகள் (புகைப்படக் கலைஞர்கள்) சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை மீறி புகைப்படம் எடுப்பதும், அவர்களது கவனத்தை ஈர்க்கும் விதமாக கூச்சலிடுவதும் பல இடங்களில் வாடிக்கையாக நடக்கிறது. இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள பிரபலமான ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனக்கு நெருக்கமான ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்தார்.
அவர் மருத்துவமனைக்கு வந்ததை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் அவர் காரை பின்தொடர்ந்து வந்து மருத்துவமனைக்கு வெளியே சூழ்ந்து கொண்டனர். அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் பெயரை "பாய் பாய்" என்று கூறி சத்தமிட்டனர். இதனால் கோபமான சல்மான் கான் அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களை நோக்கி, "உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? கொஞ்சம் கூட அறிவில்லையா?" என்று ஆக்ரோஷமாக கத்தினார்.
மேலும், "உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தால் நான் இப்படித்தான் வந்து கத்துவேனா?" என்றும் கேட்டார். அவரது இந்த கோப முகத்தை பார்த்ததும் புகைப்படக்காரர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ எடுப்பதை நிறுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.