கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

சமீப வருடங்களாக மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வருபவர் ராப் பாடகர் வேடன். கடந்த வருடம் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த செயினின் டாலரில் ஒரு விலங்கின் பல் இருந்தது கண்டறியப்பட்டு, அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை கொல்கட்டாவில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் ஆய்வு கூடத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அது நிஜமான ஒரு புலியின் பல் என்பது உறுதி செய்யப்பட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறை வேடனுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிரமாக ஆவணங்களைத் தயாரித்து வருகிறதாம். முன்னதாக வனத்துறை நடத்திய விசாரணையில், "இந்த மாலையை தான் தாய்லாந்தில் வாங்கியதாகவும், அதன் பின்னர் சென்னையில் நடந்த ஒரு ராப் இசை நிகழ்ச்சியில், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான ரஞ்சித் கும்பிடி என்ற இலங்கை வம்சாவளி ரசிகர் தனக்கு பரிசாக வழங்கினார்" என்றும் முன்னுக்குப்பின் முரணாக வேடன் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.