ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

'மனிதன்' படத்தின் வெற்றிக்கு பிறகு ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் 'ராஜா சின்ன ரோஜா'. இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் 'மனிதன்' மாஸ் ஆக்ஷன் படமாக இருந்ததால் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாக உருவாக்க நினைத்தது ஏவிஎம். 'மனிதன்' படத்தில் பணியாற்றிய இயக்குனர் முத்துராமன் மற்றும் இசையமைப்பாளர் சந்திரபோஸ் ஆகியோரே இந்த படத்திலும் பணியாற்றினார்கள். ஷாலினி அப்போது குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக இருந்ததால் அவரை இதில் நடிக்க வைத்தது. எழுத்தாளர் பஞ்சு அருணாசலம் இப்படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார்.
குழந்தைகளைக் கவரும் நோக்கில், 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...' என்ற பாடலும் படத்தில் சேர்க்கப்பட்டது. குழந்தைகளைக் கவரும் வகையில், படத்தின் கதாபாத்திரங்களுடன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இணைந்து தோன்றும் வகையிலான ஒரு பாடலை படத்தில் இடம்பெறச் செய்தனர். அக்காலகட்டத்தில் சில விளம்பரப் படங்களில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன; திரைப்படங்களில் அதுவரை அத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்கவில்லை.
மும்பையைச் சேர்ந்த அனிமேஷன் கலைஞர் ராம் மோகன், இத்தகைய பணிகளைச் செய்வதில் மிகவும் பிரபலமானவராகத் திகழ்ந்தார். அவர் இந்த பாடலுக்கான அனிமேஷன பணிகளை செய்தார். முதலில் 'ராஜா சின்ன ரோஜாவோடு' பாடல் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. கலை இயக்குநர் அரங்குகளை அமைத்தார். நடிகர்களைச் சுற்றி விலங்குகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளச் சொல்லி நடிக்க வைக்கப்பட்டார்கள். ராம் மோகன் அனிமேஷன் வேலை செய்வதற்காக, அந்தப் படக்காட்சிகள் மும்பைக்கு அனுப்பப்பட்டது.
இன்றைய காலத்தைப் போலல்லாமல், அந்தக் காலத்தில் அனிமேஷன் கையால் வரையப்பட்டது. ஒவ்வொரு பிரேமையும் தனித்தனியாக வரைய வேண்டியிருந்ததால், ராம் மோகன் இந்தப் பாடலுக்காக 84,000 ஸ்கெட்சுகளை வரைந்தார். இந்த அனிமேஷன் பாடல் படத்திற்கு பெரிய வெற்றியை கொடுத்தது. குழந்தைகள் தங்களை அந்த படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களை வற்புறுத்தியதே படத்தின் வெள்ளி விழாவிற்கு அடிப்படையாக அமைந்தது.