ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் முத்துக்காளை. ஸ்டன்ட் கலைஞராக சினிமாவில் நுழைத்து பின்னர் காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார் முத்துக்காளை.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛என் மனைவி மாலதி (வயது 47). மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சென்னை, கீழ்பாக்கம் புது பில்டிங் KMC ICU 301 வது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிருமி நோய் தொற்றால், 'கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருக்கிறார். எனது மனைவிக்கு, உரிய மேல் சிகிச்சை அளிக்க முதல்வர் ஜோசப் விஜய் உதவி வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
நடிகர் முத்துக்காளை, விஜய் உடன் மின்சார கண்ணா, தமிழன், யூத், பகவதி, சுறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நேரில் வந்த அமைச்சர்
இந்நிலையில் முத்துக்காளையின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தொலைபேசியில் பேச வைத்தார். மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, நலம் விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.