லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் ‛ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. முதல்பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி உள்ளிட்டோர் தொடருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இருப்பினும் பேட்ஜ் ஒர்க் என சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
சென்னை, ஈசிஆர் ரோட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆர்ட் டைரக்ஷன் பணியை சேர்ந்த சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன், 28 என்பவர் மின் தொழிலாளியாக பணி செய்து வந்தார். பணியின் போது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.