Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிமான்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல்

14 மே, 2026 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Demonte-colony--will-have-up-to-6-parts-Directors-information
Advertisement

அருள்நிதி நடிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி 2015 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக வெளியான 'டிமான்டி காலனி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் 3ம் பாகம் தயாராகி உள்ளது. 'டிமான்ட்டி காலனி 3: தி எண்ட் இஸ் டூ பார்' என்ற பெயரில் தயாராகி உள்ள இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் , குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்னை, லடாக், போர்ச்சுகல் மற்றும் மால்டா போன்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களில் 80 நாட்களாக நடத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‛டிமாண்டி காலனி' படம் 6 பாகங்கள் வரை வெளியாகும், அதற்கான கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: எத்தனை த்ரில்லர் படங்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும் அதில் 'டிமான்ட்டி காலனி' இரண்டு பாகங்களும் தனி வித்தியாசம் காட்டும். அந்த வகையில்தான் இந்த 'டிமான்ட்டி காலனி 3'-ஐ உருவாக்கி இருக்கிறோம். வெறும் ஹாரர் த்ரில்லராக இல்லாமல், கேரக்டர்களின் எமோஷனலும், புதிய கருவைக் கொண்டு வந்து தருகிற முயற்சியும் இந்தக் கதையின் முக்கிய அம்சங்கள்.

'டிமான்ட்டி காலனி 2' வரும்போது பாகம் 1 ரொம்பவும் நன்றாக இருந்தது என்றார்கள். முதல் படம், அடுத்தடுத்துப் போகப் போகிறது என்ற எண்ணம் இல்லாமல் செய்த படம். இரண்டாவது செய்யும்போது லாஜிக்கையும் சொல்லி, அதைக் கதையோடு ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றுக்கொன்று கனெக்ட்டாக வேண்டியதும் அவசியம். இப்போது ஏன், எதனால் அப்படி என்று சொல்லியிருக்கிறோம். இதன் பின்னணியில் ஒரு சாபம் இருப்பதையும், அது என்ன சாபம், அதற்கான ஆரம்பம் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறோம். 'டிமான்ட்டி காலனி'யின் கதை 6 பாகங்கள் வரை இருக்கிறது. என்கிறார் அஜய்ஞானமுத்து.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : ... விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap