நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

1976-ல் வெளிவந்த 'அன்னக்கிளி' ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏழை வாத்தியாராக கிராமத்துக்கு வரும் சிவகுமாருக்கு விதவைத் தாயும், வயதான அக்காவும் ஊரில் இருக்க, கிராமத்தில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி சுஜாதாவின் நற்பண்புகளால் கவரப்பட்டு காதல் கொள்கிறார். ஆனால் அக்காவின் வாழ்வுக்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் வாத்தியாருக்கு. அந்தத் தியாகத்தில் அன்னமும் பங்கேற்க, அவரே விலகிக் கொள்கிறாள். 'திருமணம் என்பது மட்டுமே காதலின் முடிவல்ல காதலனுக்காக தியாகம் செய்து அவனை நினைத்து வாழ்வதும் காதல்தான்' என்று சொன்ன படம்.
இந்த படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு ராசய்யாவை அறிமுகப்படுத்தியதும், அவர் மேஜையில் தட்டியே 'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்று இசை அமைக்க மருத்துவச்சி, செவிலித்தாய் என்று பெயர் வைக்கப்பட்ட படம் 'அன்னக்கிளி' ஆனதும், முதல் நாள் ரிக்கார்டிங்போது மின்சாரம் தடை பட்டதும் உலகம் அறிந்த ஒன்று. ஆனால் மூன்றே மூன்று டிக்கெட்தான் அன்னக்கிளியை வெள்ளி விழா நாயகியாக்கியது என்பது பலரும் அறியாத ஒன்று.
படம் வெளியானதும் பெரிய வரவேற்பில்லை. பல ஏரியாக்கள விற்கவில்லை. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமும், கதாசிரியர் ஆர்.செல்வராஜூம் தியேட்டர் விசிட் அடித்தார்கள். பாதி தியேட்டர்கூட நிரம்பவில்லை. ஒரே ஒரு தியேட்டர் மட்டும் நிரம்பியிருந்தது. அந்த தியேட்டர் மேனேஜரை அழைத்து 'ஹவுஸ்புல்' போர்ட் மாட்டச் சொன்னார்கள். இன்னும் 3 டிக்கெட் பாக்கியிருக்கிறது. அதுவும் விற்றால்தான் ஹவுஸ்புல் போர்ட் போடுவோம் என்று கூறிவிட்டார்.
கதாசிரியர் செல்வராஜ் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று 30 ரூபாய் எடுத்து வந்து அந்த 3 டிக்கெட்டையும் வாங்கினார். 'ஹவுஸ்புல்' போர்ட் மாட்டப்பட்டது. அந்த போர்டை தியேட்டரோடு புகைப்படம் எடுத்து மறுநாள் பத்திரிகையில் விளம்பரம் செய்தார்கள். அதன்பிறகு படமும் பிக்கப் ஆகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்ட் மாட்டப்பட்டது. இளையராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அன்னக்கிளி வெள்ளி விழா நாயகியானாள். இன்று அவளது பொன்விழா ஆண்டு நிறைவு பெறுகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இது பொன்விழா ஆண்டு.